மதுபோதையில் ஒருவர் பேருந்து நிலையத்தில் படுத்திருந்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

பல்லடம் பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரிப்பு

சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பல்லடம்:

விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக  பல்லடத்தில் மக்கள்தொகைப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை,போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி  உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு  வருகின்றனர்.

இந்தநிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில் கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.