கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

விடுபட்டவர்கள் அறிவிப்பு வெளியான டிசம்பர் 2-ந் தேதியில் இருந்து 3 மாதங்களுக்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் புதுப்பிக்கலாம்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014, 2015, 2016, 2017, 2019ம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள், 2022 மார்ச் 31 வரை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்த முன்னாள் படைவீரர்களில் 2014, 2015, 2016, 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிபந்தனைகளுடன் சிறப்பு முகாம் நடக்கிறது.

விடுபட்டவர்கள் அறிவிப்பு வெளியான டிசம்பர் 2-ந்தேதியில் இருந்து 3 மாதங்களுக்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் புதுப்பிக்கலாம். 

அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, வேலைவாய்ப்பு புதுப்பித்தல் அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவுகளை புதுப்பித்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT