வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே அக்கரைப்பாளையத்தில் அமராவதி ஆறு செல்கிறது. ஆறு முற்றிலும் மணற்பாங்கான பகுதியிலேயே தண்ணீர் கடந்து செல்கிறது. அக்கரைப் பாளையம் பாலத்துக்கு கீழ்புறம் அதிக அளவில் புற்களும், சீமைக்கருவேல் மரங்களும் நிறைந்து காணப்படுகிறது.
பல இடங்களில் பாறை இடுக்கில் புற்கள் முளைத்துள்ளதால் சுத்தம் செய்தாலும் மீண்டும் வளர்ந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆற்றுக்குள் முளைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன.
தற்போது மீண்டும் புற்களும், முள் மரங்களும் வளர்ந்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து முள் மரங்களை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல ஆவன செய்ய வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.