கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே அய்யா வைகுண்டர் நிழற்தாங்கலில் வைகாசி திருவிழா

நாங்குநேரி அருகே புலியூர்குறிச்சி ஊராட்சி கட்டளை கரைகுடியிருப்பு கிராமத்தில் அய்யா வைகுண்டர் நிழற்தாங்கலில் வைகாசி திருவிழா நடந்தது.

மாலை மலர்

நெல்லை:

நாங்குநேரி தாலுகா புலியூர்குறிச்சி ஊராட்சி கட்டளை கரைகுடியிருப்பு கிராமத்தில் அய்யா வைகுண்டர் நிழற்தாங்கல் உள்ளது. இந்த நிழற்தாங்கலில் வைகாசி மாத திருவிழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி மதியம் 12 மணி அளவில் சாமிதோப்பு நிழற்தாங்கலில் இருந்து சுவாமிகள் தலைமையில்  தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.

முன்னதாக கட்டளை பாலத்தில் இருந்து தீர்த்தத்துக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்து  ஊர்வலமாக தாங்கலுக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உச்சிபடிப்பும், சாமி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.

அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அய்யாவுக்கு பல்வேறு வகையான பூக்களால் அலங்காரம் செய்து பூஜை நடந்தது.

அதன்பிறகு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 12 மணிக்கு உகப்படிப்பு , சிறப்பு பூஜை நடந்தது. இன்று ( திங்கட்கிழமை) சாமி வீதியுலா நடக்கிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.