மொபட் தீ வைத்து எரிப்பு? 
உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே துணை நடிகையின் மொபட் தீ வைத்து எரிப்பு?

வானூர் அருகே துணை நடிகையின் இரு சக்கர வாகனத்தை முன் விரோதம் காரணமாக யாராவது தீ வைத்து கொளுத்தினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டக்குப்பம் சின்ன முதலியார் சாவடி பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவரது மகள் நித்யா (வயது 22).

சினிமாவில் துணை நடிகையாக உள்ளார். இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.தற்போது நித்யா தனது தந்தையுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென தீயில் பிளாஸ்டிக் பொருட்கள் கருகிய வாசனை வந்தது. இதையறிந்த நித்யா வெளியே வந்து பார்த்தார்.அங்கு அவரது இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசில் நித்யா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் இரு சக்கர வாகனத்தை முன் விரோதம் காரணமாக யாராவது தீ வைத்து கொளுத்தினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.