தயாளு அம்மாள் 
உள்ளூர் செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்

ஆயிரம் விலக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தயாளு அம்மாள் இன்று மாலை வீடு திரும்பினார்.

மாலை மலர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவுக் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அவருக்கு வயது 89.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வரும் அவருக்கு நேற்று உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, ஆயிரம் விலக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தயாளு அம்மாள் உடல் நலம் பெற்று இன்று மாலை 4.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதையும் படியுங்கள்.. அனைத்து தொகுதிகளிலும் நடமாடும் ரேசன் கடைகள்- கேரள பட்ஜெட்டில் அறிவிப்பு