உள்ளூர் செய்திகள்

28 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்

தியாகராசர் கல்லூரியில் 28 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர்.பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

மாலை மலர்

வாடிப்பட்டி

மதுரை தியாகராசர் கலை கல்லூரியில் 1981- 84-ம் கல்வியாண்டில் இளங்கலை தாவரவியல் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். உதவி ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் வரவேற்றார். ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கேசவன், பாபுராஜ், சேகர், கண்ணன், செல்வராஜ், சுப்பிரமணியன், சாந்தகுரு ஆகியோரிடம் முன்னாள் மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.

பின்னர் பலர் தங்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். முடிவில் தியாகராஜன் நன்றிகூறினார்.