உள்ளூர் செய்திகள்

5 நிமிட நேரத்தில் 92 ஆங்கில வாக்கியத்தை தலைகீழாக படித்து காஞ்சிபுரம் சிறுவன் சாதனை

மாணவன் அஸ்வத்துக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.அஸ்வந்த் தற்போது அரபு நாடான கத்தாரில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். சிவில் என்ஜீனியர். மனைவி வித்யாலட்சுமி . தற்போது சென்னை அண்ணாநகர் கிழக்கில் வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் பி. அஸ்வந்த் (வயது 11). அஸ்வந்த் தற்போது அரபு நாடான கத்தாரில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

ஆங்கிலத்தில் அதிகம் நாட்டம் மிகுந்த மாணவனாக திகழும் அஸ்வந்த் ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக விரைந்து படிப்பதில் திறமை வாய்ந்தவன்.

தற்போது அஸ்வந்த் 5 நிமிடங்களில் 92 ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக படித்து சாதனை படைத்து உள்ளார். மாணவனின் இந்த சாதனை நிகழ்வு இந்தியா புக் ஆப் ரெக்கார்ல்ட் சில் இடம் பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவன் அஸ்வத்துக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT