விழாவில் மாணவர்களுக்கு தேவார புத்தகம் வழங்கப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

குழந்தைகளை நல்வழிப்படுத்தும் ஆனந்த குருகுலம் தொடக்க விழா

திருக்குறள், பன்னிரு திருமுறை வகுப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஓதி தொடங்கி வைத்தனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் திருக்குறள், பன்னிரு திருமுறை வகுப்புகளுக்கான ஆனந்த குருகுலம் தொடக்க விழா மாடர்ன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தீபா ராணி அனைவரையும் வரவேற்றார். ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் செயலாளர் எடையூர் மணிமாறன் மாணவர்களுக்கு தேவார புத்தகம் வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக துரை ராயப்பன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க துணை தலைவர் விஜயராஜ் வாழ்த்துரை வழங்கினார். ஓதுவார் வடுகநாதன், துணை ஓதுவார் கருணாநிதி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஓதி தொடங்கி வைத்தனர்.

இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாடர்ன் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் முருகானந்தம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சர்வாலய உழவாரப்பணி குழு அமைப்புடன் இணைந்து ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT