தேனி:
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேனி மாவட்டம், பெரியகுளம், வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேனி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 2&ம் கட்டமாக வருகிற 9ந் தேதியும், 3ம் கட்டமாக 18ம் தேதியும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
வாக்குச்சாவடி அலுவ லர்கள் வாக்குச்சாவடியின் மொத்த பணிகளையும் மேற்கொள்ளப்பட வேண் டும். வாக்குச்சாவடிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், காவல் துறையினரால் ஏற்படுத் தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதி குறித்தும், வாக்குப்பதிவினை கண்காணித்திட பணியமர்த்தப்பட்டுள்ள வீடியோ ஒளிப்பதிவாளர்களின் வருகை குறித்தும் உறுதி செய்திட வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கட்டுப்பாட்டு கருவிகளுடன் எந்த வித இடர்பாடுகளுக்கும் இடமளிக்காத வண்ணம் பொருத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்களை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள 3588 வாக்கு பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களுக்கு நேரிடும் வினாக்களுக்கு தற்போது நிவர்த்தி செய்து கொண்டு, கொரோனா நோய்த் தடுப்பு அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து, தேர்தல் நேர்மையாகவும், எவ்வித பாகுபாடின்றியும் தேர்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.