கோவை:
கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி நடந்தது. முதலில் தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. கோவை மாநகராட்சியில் மட்டும் 4,641 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஒரு பெட்டியில் 5 வார்டுகளுக்குட்பட்ட வாக்குகள் பதிவாகி இருந்தது. அந்த பெட்டிகளை அலுவலர்கள் வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில் சீலை அகற்றி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.