வாகன ஓட்டிகள் அவதி 
உள்ளூர் செய்திகள்

பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் அவதி

மாற்று பாதை குறித்து அறிவிப்பு பலகை இல்லாததால் தெருக்களில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

கோவை:

கோவை-மேட்டுப் பாளையம் சாலையில் பெரிய நாயக்கன் பாளை யம் முதல் சாமிசெட்டி பாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் எல். எம். டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள் சில இடங்களில் சீரமைக்கப்பட்டு வருகிறது. 

மாற்றுவழி பாதை முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:&

பெரியநாயக்கன் பாளையம்  மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதைகளில் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. 

அந்த பகுதிகளில் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் புழுதி காற்று பறக்கிறது.  மழை காலங்களில்  குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் அதில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. அதே போல் மாற்று பாதை வழித்தடம் தொடர்பான அறிவிப்பு பலகைகள் இல்லாததால் வாகன ஒட்டிகள் வழிமாறி செல்கின்றனர். 

அந்த பகுதியில் உள்ள சிறிய தெருக்களுக்குள் வழிமாறி செல்கின்றன. இதனால் லாரிகள், பஸ்கள்  வெளியே வர முடியாமலும், உள்ளே செல்ல முடியாமலும் அங்கு சிக்கி கொள்கின்றன.  அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது  என்றனர்.