கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன்கள் எடுத்து செல்ல தடை

17 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடந்தது.

கோவை:

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது. மொத்தம் 17 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடந்தது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேர்தல் முகவர்கள், அலுவலர்கள் உள்பட அனைவரும் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த தேர்தல் முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் உள்பட அனைவரின் செல்போன்களையும் வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில் நின்ற போலீசார் வாங்கி வைத்து கொண்டனர். அதன்பின்னரே அவர்களை உள்ளே அனுமதித்தனர்.