கோவை:
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காத்திருந்தனர். அவர்களை தடுப்புகள் அமைக்கப்பட்டு முழு பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். முகவர்கள் பேனா மற்றும் பேப்பர் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அதைத் தவிர மணிபர்ஸ், செல்போன், பேப்பர் வைத்து எழுதப் பயன்படுத்தும் அட்டை ஆகியவற்றை அனுமதிக்கப் படவில்லை. முகவர்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில் பிளாஸ்டிக் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.