நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

நெல்லை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பூத் வாரியாக பூத் கமிட்டி ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை:

நெல்லை மாநகர் மாவட்டம் மானூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சீதபற்பநல்லூர், வெள்ளாளங்குளம், வல்லவன் கோட்டை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பூத் எண்கள் 140,141,142,138,116,117 ஆகியவற்றிற்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த பூத் வாரியாக பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

இதில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், ஓட்டுனரணி செய லாளர் சிவந்தி ராஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.