ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் அடிக்கடி கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு போராடும் இளைஞர்களை தீவிரவாதிகள் மூளைச்சலவை செய்து தங்களது இயக்கங்களில் சேர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாத முகாம் அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் பாரமுல்லா மாவட்டத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்த 3 தீவிரவாதிகளை கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார். முகாமில் பயிற்சி பெறும் இளைஞர்களை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாமுக்கு அனுப்பி வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.