வணிகம்

GOLD PRICE TODAY : தீபாவளிக்கு பர்ச்சேஸ் பண்ண ரெடியா... அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை

வெள்ளி விலை நேற்றைய தினம் போலவே இன்றும் குறைந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.1,240 மற்றும் வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்ததால், தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. மேலும் சுபமுகூர்த்த நாட்கள், தீபாவளி பண்டிகை வருவதால் தங்கம் விலை அதிரடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தங்கம் விலை 26-ந்தேதி சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து 27-ந்தேதி சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,135-க்கும் விற்பனையானது. 28-ந்தேதி சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விலை மாற்றமின்றி சவரன் ரூ.1,05,560-க்கு விற்பனையானது.

அதிரடி குறைவு

இதனால் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 155 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,040-க்கும் சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து ரூ.1,04,320-க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான நேரம் என்றே சொல்லலாம்.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2.10 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

29-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,560

28-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,560

27-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080

26-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,680

25-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,560

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

29-10-2026- ஒரு கிராம் ரூ.215

28-10-2026- ஒரு கிராம் ரூ.220

27-10-2026- ஒரு கிராம் ரூ.220

26-10-2026- ஒரு கிராம் ரூ.220

25-10-2026- ஒரு கிராம் ரூ.220

SCROLL FOR NEXT