வணிகம்

GOLD PRICE TODAY : மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம், வெள்ளி விலை... இன்றைய நிலவரம்

அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதிக்கு பிறகு தங்கம் விலை எதிர்பார்த்தபடி குறையுமா? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.11,600-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.92,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.170-க்கும், பார் வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற பேச்சு எழுந்ததில் இருந்து தங்கம் விலை சரிவை சந்தித்தது. கடந்த 10-ந்தேதியில் இருந்து விலை மளமள வெள குறைந்து வந்ததை பார்க்க முடிந்தது.

அந்த வகையில் 10-ந்தேதியில் இருந்து கடந்த 21-ந்தேதி வரை விலை குறைந்து வந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,490-ம், சவரனுக்கு ரூ.11 ஆயிரத்து 920-ம் குறைந்திருந்தது. அதன்பின்னர், 23, 24-ந்தேதிகளில் விலை உயர்ந்து, 25-ந்தேதி மீண்டும் குறைந்தது. மேலும் குறையும் என எதிர்பார்த்த சூழலில், நேற்று விலை உயர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது. இப்படியாக தங்கம் விலை போக்கு காட்டி வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும். ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில் உயர்ந்திருக்கிறது ஏன்? அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதிக்கு பிறகு தங்கம் விலை எதிர்பார்த்தபடி குறையுமா? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது.

சற்றே உயர்ந்த தங்கம் விலை

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 92 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை உயர்வு

விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்த வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 170 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

26-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320

25-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,360

24-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,720

23-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

22-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,720

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

26-11-2026- ஒரு கிராம் ரூ.165

25-11-2026- ஒரு கிராம் ரூ.165

24-11-2026- ஒரு கிராம் ரூ.175

23-11-2026- ஒரு கிராம் ரூ.175

22-11-2026- ஒரு கிராம் ரூ.175

SCROLL FOR NEXT