தங்கம்... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது. ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என கணிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் காலை தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மாலை திடீரென உயர்ந்தது. கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.
இதனை தொடர்ந்து இன்று காலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,710-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,850-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800
19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200
18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320
17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160
16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760
20-08-2026- ஒரு கிராம் ரூ.260
19-08-2026- ஒரு கிராம் ரூ.250
18-08-2026- ஒரு கிராம் ரூ.255
17-08-2026- ஒரு கிராம் ரூ.255
16-08-2026- ஒரு கிராம் ரூ.255