வார இறுதியில் தங்கம் விலை குறைந்தது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களில் விலை ஏற்றம், இறக்கம் மாறி வந்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த29-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் குறைந்து தங்கம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 640-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 120-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து 30-ந்தேதி சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,680-க்கும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, அக்டோபர் மாதம் 1-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,09,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து சவரனுக்கு ரூ.1,10,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,675-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
02-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,200
01-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,440
30-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.109,680
29-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.109,120
28-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,320
02-10-2026- ஒரு கிராம் ரூ.245
01-10-2026- ஒரு கிராம் ரூ.240
30-09-2026- ஒரு கிராம் ரூ.245
29-09-2026- ஒரு கிராம் ரூ.240
28-09-2026- ஒரு கிராம் ரூ.245