செய்திகள்

ஆப்கானிஸ்தான்: இறுதி ஊர்வலத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 12 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் நங்கார்கர் பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். #Afghanistan #funeralceremonyblast #suicidebombattack

காபுல்:

ஆப்கானிஸ்தானின் நங்கார்கர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று ஒரு இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஊர்வலத்திற்குள் புகுந்த ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.

இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

#tamilnews #Afghanistan #funeralceremonyblast #suicidebombattack

SCROLL FOR NEXT