கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் வரிசையாக நிற்கும் காட்சி. 
செய்திகள்

2 நாட்களில் தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு 7187 பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்காக திறக்கப்பட்ட சிறப்பு முன்பதிவு மையங்களில் 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். #Diwali #SpecialBuses

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்கள் இன்று முதல் 5-ந்தேதிவரை இயக்கப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,367 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நகரங்களில் இருந்து 9,200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதேபோல் தீபாவளி முடிந்து மீண்டும் சென்னை உள்பட பல ஊர்களுக்கு திரும்பி வர வசதியாக நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சிறப்பு முன்பதிவு மையம் திறக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.