சென்னை:
வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் தொடங்கி டிசம்பர் 31-ந்தேதி வரையிலும், அதாவது நாளையுடன் பருவமழை காலம் முடிவடைகிறது. ஆனாலும் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் நேற்று முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. லேசாக தூறிய மழை நள்ளிரவு 1 மணி முதல் அதிகமாக பெய்தது.
4 ஏரிகள் முழுமையாக நிரம்பவில்லை. ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய பகுதியில் மழை பெய்யாததால் ஏரிகளின் கொள்ளளவில் பாதி நீர்மட்டம் உள்ளது.