ஆரோக்யம்

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி அட்டவணை : 

பிசிஜி - பிறப்பின் போது

ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது

ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்

டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்

டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்

டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்

அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்

சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்

எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்

எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்

டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள்

ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள்

டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்

டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்

ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள்

எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆ ண்டுகள்

வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள்

வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்

டெட்டானஸ் - 10 ஆண்டுகள்

சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)

டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்

டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்

குறிப்பு :

மேற்காணும் தடுப்பூசிகள் அட்ட‍வணை பகிர்ந்திருப்ப‍து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமுன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டு வரவும்.