அழகுக் குறிப்புகள்

உங்களுக்கு ஏத்தா மாதிரி மூக்குத்தி எதுன்னு தெரியலையா? இதை கொஞ்சம் பாத்துட்டு போங்க..

சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரை பெண்களின் ஃபேஷன் ரசனையில் மூக்குத்தி இருந்து வருகிறது.

பெண்களின் அழகுக்கு அழகு கூட்டும் பாரம்பரியம் மற்றும் நவீன நாகரிகத்தின் அடையாளமாக திகழ்வது மூக்குத்தி.

ஒரு பெண்ணின் புன்னகையையும், முகத்தின் பொலிவையும் சட்டென்று மாற்றியமைக்கும் சக்தி ஒரு சிறிய மூக்குத்திக்கு உண்டு.

சங்க காலம் தொட்டு இன்றைய டிஜிட்டல் காலம் வரை பெண்களின் ஃபேஷன் ரசனையில் மூக்குத்தி இருந்து வருகிறது.

மூக்குத்தி டிசைன்கள்..

ஸ்டட் வகைகள், பாரம்பரிய தென்னிந்திய டிசைன்கள், மணப்பெண் டிசைன்கள், பழங்கால டிசைன்கள் மற்றும் கிளிப்-ஆன் / பிரஸ்ஸிங் மூக்குத்திகள் போன்றவற்றை தங்களுக்கு பிடித்தாற்போல அணிந்து கொள்ளலாம்.

முக வடிவமும்... பொருத்தமான மூக்குத்திகளும்!..

ஒவ்வொரு பெண்ணின் முக அமைப்பும் தனித்துவமானது. உங்கள் முக வடிவத்திற்கு ஏற்ப மூக்குத்தியைத் தேர்ந்தெடுக்கும்போதுதான் அழகு முழுமையடைகிறது.

வட்ட வடிவ முகம் :

இந்த முக அமைப்பு உள்ளவர்கள் மிகவும் சிறிய குண்டான மூக்குத்திகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சற்றே நீளமான வடிவமைப்புகள், இலை வடிவங்கள் அல்லது துளி வடிவ மூக்குத்திகளை அணிந்தால் முகம் நீளமாகவும் அழகாகவும் தோற்றமளிக்கும்.

சதுர வடிவ முகம் :

கூர்மையான தாடை மற்றும் அகலமான நெற்றி கொண்ட சதுர வடிவ முகத்தினருக்கு, பெரிய வட்ட வடிவ மூக்குத்திகள் அல்லது சிறிய வளையங்கள் மிக அழகாகப் பொருந்தும்.இது முகத்தின் கூர்மையைக் குறைத்து மென்மையாகக் காட்டும்.

நீள வடிவ முகம் :

இவர்களுக்குக் கொடுத்து வைத்த முகம் என்றுதான் சொல்ல வேண்டும். சிறிய ஒற்றைக்கல் மூக்குத்தி முதல் பெரிய பாரம்பரிய வளையங்கள் வரை அனைத்துமே கச்சிதமாகப் பொருந்தும்.

ஆடைகளுக்கு ஏற்றவாறு மேட்ச் செய்வது எப்படி?

ஜீன்ஸ் & வெஸ்டர்ன் உடைகள்:

சிறிய சில்வர் வளையங்கள் வடிவ மூக்குத்தி அழகாக இருக்கும்.

தினசரி குர்தா & காட்டன் புடவைகள்: சிறிய எனாமல் பெயிண்ட் செய்யப்பட்ட அல்லது மெட்டல் மூக்குத்திகள் கச்சிதமாக இருக்கும்.

திருமணப் பட்டுப்புடவைகள்: சிவப்பு மற்றும் பச்சை கற்கள் பதிக்கப்பட்ட தங்க மூக்குத்திகள் அல்லது முத்துக்கள் தொங்கும் மூக்குத்திகள் அழகான தோற்றத்தை தரும்.

எந்த பக்கம் குத்த வேண்டும்? வலது பக்கமா? இடது பக்கமா?

முந்தைய காலத்தில் அனைவருமே இடது பக்கம் தான் மூக்குத்தி அணிந்திருப்பார்கள். பெண்களுக்கான மாதவிடாய் கால வலி குறையும் என்று கூறுவர்.

ஆனால் தற்போது எந்த பக்கம் வேண்டுமானாலும் டிரெண்டிங்குக்கு ஏற்றார்போல், எந்த பக்கம் பிடிக்கிறதோ அந்த பக்கத்தில் மூக்குத்தி அணிந்துகொள்கிறார்கள்.