சமையல்

மாலை நேர ஸ்நாக்ஸ் காலிஃபிளவர் பருப்பு வடை

சூடான டீ, காபியுடன் சாப்பிட இந்த வடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர் - ஒரு கப்

கடலை பருப்பு - அரை கப்

சோம்பு - 1 டீஸ்பூன்

கசகசா - கால் டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவைகேற்ப

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

செய்முறை

கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின் மிக்சியில் போட்டு அதனுடன் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் துருவிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்து கொள்ளவும்.

இன்னொரு கிண்ணத்தில் தண்ணீரை வடிகட்டிய காலிஃபிளவர், அரைத்த கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

சூப்பரான காலிஃபிளவர் பருப்பு வடை ரெடி.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health