பொது மருத்துவம்

video-"புற்றுநோய்க்கும் இதயப் பாதிப்புக்கும் சிறுநீரகமே காரணம்!"-பிரபல அக்குபஞ்சர் மருத்துவர் லூதர்சேத் பேட்டி!

"தற்போதைய காலகட்டத்தில் நோய்கள் பெருகுவதற்குக் காரணம் மனிதர்களின் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் தான்"

பிரபல அக்குபஞ்சர் நிபுணர் மருத்துவர் லூதர்சேத், அண்மையில் மாலைமலருக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில், மனித உடலின் ஆரோக்கியம், நவீன வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் மாற்று மருத்துவங்களின் தற்போதைய நிலை குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவர் அளித்த பேட்டியின் முக்கிய மருந்துவ விவரங்களை விரிவாக காணலாம்.

மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அக்குபஞ்சர் தத்துவத்தின்படி, மனித உடலில் ஏற்படும் மாபெரும் நோய்களான புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு சிறுநீரகக் குறைபாடே அடிப்படை என்று மருத்துவர் லூதர்சேத் தெரிவித்துள்ளார்.

அக்குபஞ்சர் அறிவியலில் புற்றுநோய் என்று தனியாக எந்தப் பெயரும் இல்லை. உடல் அளவுக்கு அதிகமாகக் குளிர்ச்சி அடைவதையே அவ்வாறு அழைக்கின்றனர். நீர் மற்றும் சிறுநீரகம் சார்ந்த ஆற்றலை முறைப்படுத்தி, அதனை பலப்படுத்துவதன் மூலம் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தினார்.

இதயத்தைக் கட்டுப்படுத்தும் சிறுநீரகம்:

மனித உடலின் மிக முக்கிய உறுப்பான இதயத்தை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறுநீரகம்தான். எனவே, சிறுநீரகத்தில் ஏற்படும் ஆற்றல் குறைபாடே இதயப் பாதிப்புகளாகவும் மாறுகிறது.

12 நாடிகள் பரிசோதனை:

அலோபதி மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப் மூலமும், சித்தா மருத்துவர்கள் சாதாரண நாடி மூலமும் நோய் கண்டறிவது போல, அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஒரு தனித்துவமான முறை பின்பற்றப்படுகிறது. நோயாளியின் கைகளில் உள்ள '12 முக்கிய உறுப்புகளுக்கான நாடி'களை மருத்துவர்கள் மிகத் துல்லியமாகப் பரிசோதிக்கின்றனர்.

இதன் மூலம் உடலில் எந்தப் பஞ்சபூத ஆற்றல் அடைபட்டுள்ளது. எங்கு ஆற்றல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளது என்பதைக் கண்டறிந்து, ஊசிகள் மூலம் அந்த ஆற்றலைச் சமநிலைப்படுத்துகின்றனர்.

"பசித்தால் மட்டுமே உண்ணுங்கள்":

தற்போதைய காலகட்டத்தில் நோய்கள் பெருகுவதற்குக் காரணம் மனிதர்களின் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் தான் என்று மருத்துவர் லூதர்சேத் எச்சரித்துள்ளார். நாம் உண்ணும் உணவு முறையாக ஜீரணமாக நமது இரைப்பைக்கு குறைந்தது ஒன்றரை மணி நேரம் தேவைப்படுகிறது. ஆனால், மக்கள் பசி எடுப்பதற்கு முன்பாகவே அடுத்தடுத்து உணவுகளை உள்ளே தள்ளுவதால் உடல் உறுப்புகள் ஓய்வின்றி இயங்கிப் பழுதடைகின்றன.

50 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற மக்கள் மூன்று வேளை சாப்பிட்டாலும், வயல்களில் கடினமாக உழைத்து வியர்வை சிந்தியதால் ஆரோக்கியமாக இருந்தனர். ஆனால் இன்று, எந்த உழைப்பும் இன்றி துரித உணவுகளையும், பண்டங்களையும் (நொறுக்குத் தீனிகள்) தொடர்ந்து உண்பதே நோய்களின் கூடாரமாக உடல் மாறுவதற்குக் காரணம். வறுத்த, பொரித்த உணவுகள் வயிற்றின் நீர்ச்சத்தை உறிஞ்சி, செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும். இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

இன்றைய காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் பல லட்சங்களாக உயர்ந்து வருவதாலும், இன்சூரன்ஸ் இருந்தாலும் உடல் பாதிக்கப்படுவது நாம்தான் என்ற விழிப்புணர்வு பெருகி வருவதாலும், தற்காலத்தில் மக்கள் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு அக்குபஞ்சர் போன்ற மாற்று மருத்துவ முறைகளை நோக்கி அதிகளவில் நகரத் தொடங்கியுள்ளனர் என்று மருத்துவர் லூதர்சேத் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT