சினிமா

கமல் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

வீர தீர சூரன்' படத்தை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு 'சண்டியர்' என பெயரிடப்பட்டுள்ளது.

வீர தீர சூரன்' படத்தை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மதுரை பின்னணியைக் கொண்ட, முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த கிராமத்து கதையாக இப்படம் உருவாகிறது. சி.ஜி டி-ஏஜிங் மற்றும் நடனப் பாடல்கள் இல்லாமல், யதார்த்தமான தோற்றத்தில் கமல் நடிக்கிறார்.மேலும் கமஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கமல்ஹாசனின் 'விருமாண்டி' படத்திற்கு 'சண்டியர்' என்று பெயர் வைக்கப்பட்டு, பின்னர் எதிர்ப்புகளால் 'விருமாண்டி' என மாற்றப்பட்டது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கமல் இப்போது 'சண்டியர்' தலைப்பை தனது புதிய படத்திற்கு பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT