நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'அறிவு' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கழுகு' திரைப்படம் மூலம் இயக்குநராக அறியப்பட்ட புகழ் சத்யசிவா படத்தை எழுதி இயக்கியுள்ளார்.'உறியடி' விஜயகுமார், கயல் ஆனந்தி, சுபிக்ஷா, இஸ்மத் பானு மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பின்தங்கிய மலைக்கிராமத்து மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்ப்பதில் ஏற்படும் சவால்களை மையமாக வைத்து விஜயகுமார் நடித்துள்ளார்.பெண்களின் உரிமைகளையும் மையமாக வைத்து படம் உருவாகியிருப்பாதக டீசரில் தெரிகிறது.
டீசர் வெளியான நிலையில் திரைப்படம் டிசம்பர் 11 அன்று திரையில் வெளியாகிறது.இந்த நிலையில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே கோவவில் நடைப்பெறவுள்ள சர்வதேச திரைப்படவ் விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரைப்படம் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.