கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வான ‘அறிவு’

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா நியூஹாரிசன்ஸ் பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
arivu movie
Published on: 

மூவிட்ரோன் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா நியூஹாரிசன்ஸ் பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலக அளவில் கவனம் பெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ள தமிழ் திரைப்படம்என்ற பெருமையை ‘அறிவு’ திரைப்படம் பெற்றுள்ளது.

சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதைக்களம்

பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் கூடிய கருத்துகளை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்லும் படைப்பாக ‘அறிவு’ உருவாகியுள்ளது. இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் செயல்படுகிறார்.

டிசம்பரில் வெளியாகும் திரைப்படம்

உறியடி திரைப்படத்தில் புகழ் கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றிருந்த விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள .. 'அறிவு' (Arivu) திரைப்படம், வருகிற டிசம்பர் 11, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது..

அறிவு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலில் அறிவிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் நிறைவடைந்தது. இப்படத்திற்கு நிகேஷ் ஆர்.எஸ், இயக்குநருடன் இணைந்து வசனங்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்க்து.

X