படத்தில் நடிகர் மோகன்லாலின் சிறப்புத் தோற்றம் பெரிய அளவில் ஒட்டவில்லை என்றும், அது பலவீனமான திரைக்கதையை காப்பாற்ற உதவவில்லை என்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் அறிமுகமாகி, ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'துடக்கம்' (Thudakkam). ஒரு சுமாரான ஆக்ஷன் மற்றும் மெசேஜ் சார்ந்த த்ரில்லர் படமாக அமைந்துள்ளது.
ஒரு நடுத்தர வயது தந்தை (சாய் குமார்) மற்றும் அவரது மகள் மீனு (விஸ்மயா மோகன்லால்) ஆகிய இருவரைச் சுற்றியே படத்தின் ஆரம்ப காட்சிகள் நகர்கின்றன. தேர்வு எழுதச் செல்லும் மீனு திடீரென காணாமல் போகிறார். அவர் வீடு திரும்பினாலும், ஏதோ ஒரு மர்மமான ஆபத்து அவரை பின்தொடர்கிறது. இதன் பின் நடக்கும் போலீஸ் விசாரணை மற்றும் அடுத்தடுத்த திருப்பங்களே 'துடக்கம்' படத்தின் கதை.
அறிமுகப் படத்திலேயே சண்டைக் காட்சிகள் மற்றும் தற்காப்புக் கலைத் திறன்களில் விஸ்மயா சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
படத்தின் முதல் பாதி மிகச்சிறந்த டோனல் ஷிப்ட் மற்றும் அழுத்தமான த்ரில்லர் காட்சிகளுடன் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வருகிறது.
சாமன் சாக்கோவின் எடிட்டிங் மற்றும் படத்தின் ஆக்ஷன் வடிவமைப்பு ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.
முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லை. திரைக்கதை மிகவும் கணிக்கக்கூடியதாகவும், செயற்கையாகவும் மாறுகிறது.
படத்தில் நடிகர் மோகன்லாலின் சிறப்புத் தோற்றம் பெரிய அளவில் ஒட்டவில்லை என்றும், அது பலவீனமான திரைக்கதையை காப்பாற்ற உதவவில்லை என்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
படம் பல இடங்களில் வழக்கமான மெசேஜ் சொல்லும் பாணியிலேயே நகர்வதால் புதுமை ஏதுமில்லை.
'துடக்கம்' ஒரு புதிய ஆக்ஷன் நாயகியாக விஸ்மயா மோகன்லாலின் அறிமுகத்திற்காகவும், முதல் பாதியின் விறுவிறுப்பிற்காகவும் ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்!