100 கிலோ எடையால் மூச்சுவிட கூட சிரமப்பட்டேன்- நடிகை விஸ்மயா மோகன்லால்

கொரோனா வந்ததால் நான் வீட்டிற்கு திரும்பாமல் அங்கேயே இருந்தேன். அப்போது அந்த பயிற்சியை ரசித்து செய்தேன்.
நடிகை விஸ்மயா மோகன்லால்
நடிகை விஸ்மயா மோகன்லால்
Published on

சுமார் 100 கிலோ எடை இருந்த போது படிக்கட்டுகளில் ஏறுவது கூட கடினமாக இருந்தது. படிக்கட்டு ஏறும் போது எனக்கு மூச்சு திணறி விடும்.

நடிகர் மோகன்லாலின் மகளான விஸ்மயா மோகன் லால் சினிமாவில் அறிமுகமாகி புதிய படங்களில் நடித்து வருகிறார்.

100 கிலோ எடை

இந்நிலையில் தனது உடல் எடை 100 கிலோவாக இருந்த போது ஏற்பட்ட சிரமம் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் சுமார் 100 கிலோ எடை இருந்த போது படிக்கட்டுகளில் ஏறுவது கூட கடினமாக இருந்தது. படிக்கட்டு ஏறும் போது எனக்கு மூச்சு திணறி விடும். இதைப் பார்த்து ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறாய்? என்று கேட்பார்கள். இதை தொடர்ந்து நான் தாய்லாந்து சென்றேன். அங்கு ‘பிட்கோ’ என்ற இடத்தில் நான் “மு வே தாய்” என்ற கலையை பயிற்சி செய்ய தொடங்கினேன்.

மிகவும் கடினமான பயிற்சியாக இருந்தது. அந்த நேரத்தில் கொரோனா வந்ததால் நான் வீட்டிற்கு திரும்பாமல் அங்கேயே இருந்தேன். அப்போது அந்த பயிற்சியை ரசித்து செய்தேன்.

என் பயிற்சியாளர் 10 உதைகள் செய்ய சொன்னால் நான் 9-வது உதையில் நிறுத்திவிடுவேன். அவர் இன்னும் ஒரு உதை என்பார். இதை தொடர்ந்து 30 உதைகள் செய்ய தொடங்கினேன். என் நோக்கம் உடல் எடையை குறைப்பது அல்ல. எனக்கு பயணம் செய்ய வேண்டும் என்பது போல் இருந்தது. எனக்கு தாய்லாந்து மிகவும் பிடித்திருந்தது. அங்கு நான் சுதந்திரமாக உணர்ந்தேன். தாய்லாந்து வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இவ்வாறு விஸ்மயா கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com