தீபாவளி பட்டாசாக வெடிக்கும் கதைக்களம். ஸ்க்ரீனில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தோன்றய Charming சூர்யா. நஸ்ரியாவின் கியூட்டன்ஸ் ஓவர்லோடட். நஸ்லேனின் நாசூக்கான வில்லத்தனம். ஆவேஷம் இயக்குநர் ஜீத்து மாதவனின் Chaos கலைவண்ணம். கில்லர் கதையோடு இழையோடும் காமெடி. Hypeக்கு ஏற்றபடி அவ்வளவு சீன் இருக்கிறதா இந்த 'சீன்'-க்கு.
மலையாளிகள் எடுக்கும் படம் என்றாலே அதற்கு அதிக சீன் கிரியேட் செய்வதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு விமர்சனம் உண்டு. அதற்கு எதிர்வாதமும் அவர்களின் விமர்சனத்திலேயே உண்டு. 'அதில் அப்படி என்ன பெரிதாக இருக்கிறது' என்று கூறும்போதே, அதில் 'அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை' என்ற அர்த்தம் வருகிறது. அதுவே பலம். அவை இயல்பை மீறுவதில்லை.
அண்மை காலமாக தமிழ் கமர்ஷியல் சினிமா வரிசைகளில் ஒரு பேட்டர்ன் இருப்பதை உணரலாம்.
அவை சீனுக்கு சீன் பார்முலா சினிமாவாக செதுக்கப்பட்டு ரீல்ஸ் பார்மட்டில் இருப்பதாக விமர்சனம் உண்டு. இது ஒரு வகையில் ஆடியன்ஸ்-க்கு தற்காலிக 'வைப்' கொடுத்தாலும் ஒட்டுமொத்தமான கதையாக ஒரு முழு நீள படமாக அது மனதில் உட்கார மறுக்கிறது என கூறுவோர் உண்டு. கதையுடன் பயணிக்கும் கதாநாயகனை விட கதாநாயகனுடன் பயணிக்கும் கதைகளையே கமர்ஷியல் சினிமா இயக்குநர்கள் எடுத்துத் தள்ளுகின்றனர்.
ஆனால் இயல்புவாத கூறுகளுடைய மலையாள சினிமாவிலிருந்து வந்த ஜீத்து மாதவன் கமர்ஷியல் எலமென்ட் உடன் ப்ரசண்ட் செய்த படம் ஆவேஷம். மலையாள சினிமாவில் பல்லாண்டுகளாக இருந்த 'கேங்ஸ்டர்' வறுமையை அது போக்கியது எனலாம். அப்படி ஒரு இயக்குநர் தமிழின் முன்னணி (கமர்ஷியல் ஆக்கப்பட்ட) சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார் என்றால் புருவம் உயருவது இயல்பே.
சூர்யா என்ற ஹீரோவுக்கு இன்றளவில் உள்ள க்ரேஷ் 'கருப்பு' பட வெற்றியில் தெரிந்தது. சூர்யாவை எவ்வாறு திரையில் ப்ரசண்ட் செய்வது என்பதில் தான் அவரின் படங்களின் வெற்றியும் தோல்வியும் உள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக சூர்யாவின் பல பரிமாணங்கள் திரையில் பயன்படுவது குறைந்து வருகிறது. இறுக்கமான, மாஸான கேரக்டர்களே அவருக்கு அதிகம் கொடுக்கப்பட்டு வருகிறது.
மாறாக 2000 மற்றும் 2010களில் சூர்யாவிடம் இருந்த Charming பக்கத்தை பலர் பயன்படுத்த தவறிவிடுகின்றனர். அந்த வறுமையை 'சீன்' மூலம் போக்கியுள்ளார் ஜீத்து மாதவன்.
வராது வந்த மாமணியாய், இன்பராஜாக, பீல் குட் சூர்யா 'சீன்'இல் தோன்றுகிறார். அவரின் கேரக்டரைஷேசனே படத்தின் ஆதாரம்.
மறுபுறம் நஸ்ரியா. நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவிற்கு திரும்பியுள்ளார் ஒரு தலைமுறையின் 'க்ரஸ்'. இன்னும் மாறாத அதே ஸ்டைல். காண்போர் மனதை சினுங்க வைக்கும் கியூட்னெஸ். படத்தில் மாயா ('காக்க காக்க' ஜோதிகா பெயர்) கதாபாத்திரத்தில் தோன்றும் நஸ்ரியா சூர்யாவுக்கும் கதைக்கும் ஈகுவல் எலம்மென்ட். சூர்யாவுக்கு அடுத்தபடியாக படத்தின் பலம் என்றே கூறலாம்.
மூன்றாவது நஸ்லேன். பிரேமலு, லோக்கா என தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மல்லு boy நஸ்லேன் இந்த படத்தில் ஒரு தொடர் கொலைகாரன். சூர்யாவுக்கு எதிரில் வில்லனாக சரி சமமான charisma உடன் உயர்ந்து நிற்கிறார் அவர். மலையாளம் கலந்த தமிழ், மலையாள வில்லன்களுக்கே உரிய இயல்பு மாறாத அதீதம் என ஸ்கோர் செய்திருக்கிறார்.
மறுபுறம் லால். சண்டை கோழி தொட்டு தமிழ் சினிமாவில் தனித்துவம் பதித்த லால் இதில் ஒரு சிரிப்பு போலீஸ். படத்தில் அவரின் போர்ஷன் அனைத்தும் ஹியூமர் தெளிப்பு.
சீரியல் கில்லர், காண்டிராக்ட் கில்லர், தொடர் கொலைகள் என மிகவும் டார்க் ஆன பாதையை பகடியாக முரண் நகைப்பாக மாற்றி பீல் குட் ஆக்க முயன்றிருக்கிறது சீன். சிட்டுவேஷனல் காமெடிகள் படத்தில் பட்டாசாக வெடித்துச் சிரிக்க வைக்கிறது.
படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவமும் தனித்துவமும் கொடுக்கப்பட்டுள்ளது சீனின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. சூர்யாவின் தந்தையாக வரும் ஆனந்த்ராஜ், பிற போலீஸ் கதாபாத்திரங்கள், ஏன்.. வில்லன் நஸ்லேனுடன் இணைந்து கொலைகள் புரியும் ஆட்டோ ஓட்டுநரும், தையல் கடை பெண்மணியும் கூட படத்தில் தத்தமது பங்கை நிறைவுடன் கொடுத்துள்ளனர். கேமியோக்களும் அர்த்தமுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆறுதல்.
இது முழுக்க முழுக்க சூர்யா படம். 10 பேரை அடித்தால் தான் மாஸ் ஹீரோ என்ற பிம்பத்தையே உடைக்கும் ஆபத்தான முயற்சியை சூர்யா இப்படத்தில் எடுத்துள்ளார். எக்ஸ்பெரிமென்டல்!. நஸ்ரியாவின் சண்டைக் காட்சி, அதில் சூர்யா செய்யும் சேட்டை தான் படத்தின் உச்சகட்ட ஹைலைட் காட்சி!
ஹீரோவுக்கான பிம்பத்தை கட்டமைப்பது போலவே அந்த பிம்பத்தை உடைப்பதும் ஒரு ரசிக்கத்தக்க செயல் என்பது Hence proved!
காதல், கொலை, மிஸ்டரி, த்ரில்லர் என பல கூறுகள் படத்தில் இருந்தாலும் அவை அனைத்துக்கும் பிண்ணனியில் இயல்பான காமெடி இழையோடுகிறது. எந்தவித நெருடலும் இன்றி!. இது முழுக்க முழுக்க ஜீத்து மாதவனுக்கு கிடைக்க வேண்டிய கிரடிட்.
ஷார்ப் ஆன காட்சியமைப்பு படத்தை தொய்வின்றி நகர்த்த பேருதவி செய்கிறது. துணை கேரக்டர்கள், இணை கேரக்டர்கள் என ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அனைவரும் ஸ்கோர் செய்துள்ளனர்.
ஹீரோக்களின் பழைய படங்களில் ரெபரென்ஸ் வைப்பது ஒரு சடங்காக தற்போது மாறிவிட்டது. 'சீன்' உம் அதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் அது படத்திலிருந்து விலகி தனியாக தெரியாமல், கதைக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது ப்ளஸ்.
'தென்றல் வந்து தீண்டும்போது' என இளையராஜா பாடல் பயன்படுத்தப்பட்டது உட்பட.
Fan service என்ற கட்டுக்குள் முடங்கிவிட மறுக்கிறது சீன். அது தன் கலை மீது நம்பிக்கை கொண்ட இயக்குநரின் 'திமிர்'.
வின்டேஜ் சூர்யாவை வெளிக்கொணர கேரளாவில் இருந்து ஒருவர் வர வேண்டியிருப்பது ஆக்கபூர்வமான விவாதித்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது.
மொத்தத்தில் 'சீன்' படம் முழுமையான நிறைவை தரும் தீபாவளி பரிசு.