தரவரிசை

Poomara Kathu

தற்கொலை அனைத்திற்கும் முடிவில்லை என்பதை பற்றிய கதை

Vijay Velan

கதைக்களம்

பள்ளி பருவத்தில் நாயகி மீது நாயகனுக்கு காதல் மலர்கிறது. அந்த காதலை காதலியிடம் சொல்ல வரும் நேரத்தில் நாங்கள் அனைவரும் நண்பர்கள் தான் என்று கூறிவிடுகிறார் நாயகி.

இதனால், அந்த காதலை மூடிவிடுகிறார் நாயகன். கல்லூரி முடிந்த பிறகு ஊரில் உள்ள மற்றொரு பெண் மீது காதல் வருகிறது. அப்பெண் விபத்தில் கால் ஊனமாகிவிட, அந்த விபத்திற்கு தான் காரணம் என்று, அப்பெண்ணை திருமணை செய்ய முடிவெடுக்கிறார் நாயகன்.

வீட்டின் எதிர்ப்பையும் மீறி அப்பெண்ணை திருமணமும் செய்து கொள்கிறார். அதன் பிறகு ஹீரோவின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

நடிகர்கள்

விதுஷ், சந்தோஷ் சரவணன் என்ற இரண்டு ஹீரோக்களும் கதைக்கேற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாதியில் மனோபாலா மற்றும் தேவதர்ஷினி இருவருக்குமிடையேயான பள்ளி பருவ காதல் காட்சி படத்திற்கு பலமாக நிற்கிறது.

இயக்கம்

பள்ளி பருவ கதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் ஞான ஆரோக்கியராஜா. முதல் பாதி வேகமாக நகர, இரண்டாம் பாதியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். கதை நகராமல் இருப்பதால் பார்வையாளர்களிடையே சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் ஜோ, கதைக்கு ஏற்ப தனது கேமராவை பயன்படுத்தியுள்ளார்.

இசை

அரவிந்த் ஶ்ரீராம் மற்றும் ஈஸ்வர் ஆனந்த் ஆகியோரது இசை கேட்கும் ரகம்

தயாரிப்பு

ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில்,ஞான ஆரோக்கிய ராஜா பூமர காத்து திரைப்படத்தை தயாரித்துள்ளார்.