சினிமா

மஞ்சணத்தி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

2026 செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

2026 செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மஞ்சணத்தின் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய தமிழ்த் திரைப்படம் மஞ்சணத்தி ஆகும்.இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி மற்றும் காக்கா முட்டை விக்னேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.மாரி செல்வராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

இசைஞானி இளையராஜா மஞ்சணத்தி படத்திற்கு இசையமைகிறார், இப்படத்திற்கு இவர் இசையமைப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது)

இந்த நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறித்து இயக்குநர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

மஞ்சனத்தி' (MANJANATHI) திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த அற்புதமான நாட்களையும், மறக்க முடியாத அனுபவங்களையும் சாத்தியமாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT