சினிமா

'BURIED' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இத்திரைப்படத்தில் நடிகர் வெற்றி ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் புலனாய்வுத் திரைப்படமான 'BURIED' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், போலீஸ் விசாரணை தொடர்பான செய்தித் தாள்களின் துண்டுகள் பின்னணியில் இடம்பெற்றுள்ளன. மேலும், மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்த பல ஆண்கள் இருக்கும்படியும் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படக்குழுவிற்கு வாழ்த்து

திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளங்களில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்

வெப்படத்தை இயக்கிய ஹாரூன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஒரு 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடிகர் வெற்றி நடித்துள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியின் சவால்கள் மற்றும் அவரது தொழில் அவரது குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது

இத்திரைப்படத்தில் அக்ஷதா ஸ்ரீனிவாஸ், சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், கோடங்கி வடிவேல் மற்றும் ஜென்சன் திவாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT