சினிமா

ஜான் டோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இத்திரைப்படம் விறுவிறுப்பான மிஸ்டரி கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது.

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஜான் டோ' (John Doe) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குநர் மதுமிதா இயக்குகிறார்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்பட குழு வெளியிட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்

ஒரு விறுவிறுப்பான மிஸ்டரி கிரைம் திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது.அர்ஜுன் தாஸுடன் இணைந்து சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைக்கிறார்.

அவன் தேடும் பயணத்தில், எனக்கும் எனக்கான ஒரு சிறு பகுதியை நான் கண்டுகொண்டேன். #JohnDoe உலகின் சந்துருவைச் சந்தியுங்கள் .இந்த நவம்பரில், உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. என்று நடிகர் அர்ஜுன் தாஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT