நடிகர் ஜெய் கதநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படமானது திகில் நகைச்சுவையுடன் திரைக்கு வர இருக்கிறது , இப்படத்தில் ஜெய்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் திரைப்படமானது உருவாக உள்ளது .தியாகராஜ டாக்கீஸ் சார்பில் ஏ.எம். பிரபாகரன் இப்படத்தை தயாரித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், ஐ.ஏ.எஸ், இந்நிகழ்ச்சித் தொடக்க விழாவில் கலந்து கொண்டு படபிடிப்பு விழாவை தொடங்கி வைத்தார்
இன்று தொடங்கி 23 நாட்களுக்கு தென்காசியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.இப்படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தையும், வி. ஜே. சபு ஜோசப் படத்தொகுப்பையும் , சண்டைப் பயிற்சியாளாரக ராம் குமார் இருக்கிறார்.
தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, சிவ பிரசன்னாவின் இயக்குநர் அறிமுகம், ஜெய்யின் ஹாரர் காமெடி கதாபாத்திரம் எனப் பல அம்சங்களுடன் உருவாகும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்