தாராபுரம், மதுராந்தகத்தில் த.வெ.க. வெற்றி பெறும்- நடிகர் ஜெய்

த.வெ.க. அரசின் 100 நாள் ஆட்சியை பார்த்தபிறகு அவர்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது.
Actor Jai
Published on: 

நடிகர் ஜெய், முதலமைச்சர் விஜய்யின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். இவர் விஜய்யுடன் இணைந்து பகவதி படத்தில் அவரது தம்பியாக நடித்து இருந்தார்.

முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவிலும் முதல் ஆளாக ஜெய் பங்கேற்றார். தற்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் ஜெய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தாராபுரம் பிரசாரத்துக்காக வந்த நடிகர் ஜெய், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு சாதகம் தாராபுரம் தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருக்கிறேன். மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் த.வெ.க. நிச்சயம் வெற்றி பெறும் என்ற ஆழமான நம்பிக்கை உள்ளது.

த.வெ.க. ஆட்சியில் நடைபெற்ற மாற்றங்கள் பொதுமக்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனால் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், ஒரு வாய்ப்பு கிடைத்தால் வெற்றி பெறாத தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும் என்பதற்கான மாதிரி தான் இது.

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினர். ஒருசில இடங்களில் பொதுமக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. ஆனால் த.வெ.க. அரசின் 100 நாள் ஆட்சியை பார்த்தபிறகு அவர்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com