சினிமா

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்

நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜரானார்.

மாலை மலர்

சவுந்தர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இவரும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்து விவாகரத்து பெற முடிவு செய்தனர்.

இதற்காக, அவர்கள் சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தனர். அப்போது இருவரும் கோர்ட்டில் ஆஜராகி, தங்களது நிலை குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்த வழக்கு தீர்ப்புக்காக சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.