சினிமா செய்திகள்

விஜயின் திடீர் மும்பை பயணம் எதற்காக தெரியுமா? - வெளியான புதிய தகவல்

புகைப்படங்கள் வெளியாகி விஜயின் மும்பை பயணத்தின் பரபரப்பை முடிவுக்கு கொண்டு வந்தது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று திடீரென சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். அவரது மும்பை பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விஜயின் மும்பை பயணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் நடந்த இயக்குனர் அட்லீ மனைவி பிரியா வளைகாப்பு விழாவில் விஜய் பங்கேற்று வாழ்த்தினார். இதில் கலந்து கொள்வதற்காகவே விஜய் மும்பை சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி விஜயின் மும்பை பயணத்தின் பரபரப்பை முடிவுக்கு கொண்டு வந்தது.

விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ ஆகிய படங்களை அட்லி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.