சினிமா செய்திகள்

மிஷ்கினால் அசௌகர்யமா? - கீர்த்தி சுரேஷ் பதில்

கீர்த்தி சுரேஷ் ஏன் இவ்வளவு அசௌகரியப்பட வேண்டும்?

மிஷ்கினின் செய்கை குறித்து எக்ஸ் பக்கத்தில் பயனர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் கூட்டணியில் சத்தியவான் சாவித்திரி படம் உருவாகியுள்ளது.

ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார்.

மிஷ்கின், கீர்த்தி சுரேஷ்

இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நாளை (20ஆம் தேதி) இப்படம் திரையரங்குகளில் வெளியாவுள்ளது. படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது.

கடந்த சில நாட்களாக படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு வருகின்றனர்.

சர்ச்சை

இதனிடையே படத்தின் நிகழ்வில் கலந்துகொண்ட மிஷ்கின் மேடையில் அருகில் அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷை பாராட்டும் போது அவரைத் தொட்டபடியே பேசினார்.

இதன் காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில் எக்ஸ் தளத்தில் ஒரு பயனர், “ஒரு ஆண் மென்மையாக தொட்டதற்கே கீர்த்தி சுரேஷ் ஏன் இவ்வளவு அசௌகரியப்பட வேண்டும்?

திரைப்படங்களில் இப்படியெல்லாம் நடக்கும் போது அமைதியாகத்தான் இருக்கின்றனர். கீர்த்தியின் முகத்தைப் பாருங்கள், ரொம்பவும் விசித்திரமாகிவிட்டது” என பதிவிட்டிருந்தார்.

கீர்த்தி சுரேஷ் சாடல்

அவரின் பதிவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், “முதலில் என் முகத்தில் எங்கே அசௌகரியத்தைக் கண்டீர்கள்?

எங்களுக்குள் அப்பா - மகள் போன்ற உறவு இருப்பதாக அவரும் நானும் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?

இரண்டாவதாக, திரைப்படங்களில் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டால் பொதுவெளியிலும் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமா? நீங்கள் சில விஷயங்களை சரியாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் பிரதர்” எனக் கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இந்த நிகழ்வில், 'டோரதி' படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டி அவருக்கு மிஷ்கின் தங்க மோதிரம் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT