டோரதி- திரை விமர்சனம்

டோரதி- திரை விமர்சனம்

இளையராஜாவின் இசையில் முத்துமணி, கல்யாண விருந்து பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.
Published on: 
டோரதி- விமர்சனம்(3 / 5)

கதை

டோரதி சிறு வயதில் இருந்தே ரிஷிகாந்தும், சனந்தும் நெருங்கிய நண்பர்கள். சாதி வெறியரான சனந்தின் தந்தை முத்துகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்களையே ஆணவக் கொலை செய்து விடுகிறார்.

இந்நிலையில் முத்துக்குமாரின் மகனான சவுந்தரராஜா, கீர்த்தி சுரேசை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

திருமணமாகி கொஞ்ச நாட்களில் கீர்த்தி சுரேஷ் திடீரென மர்மமான முறையில் தூக்கில் தொங்குகிறார். அவரது சாவுக்கு தந்தைதான் காரணம் என பரிதவிக்கும் சனந்த் ஒரு கட்டத்தில் பெண்மை உணர்வு ஏற்பட்டு திருநங்கையாக மாறுகிறார்.

இதனால் கோபம் அடைந்த முத்துக்குமார், ரிஷிகாந்திடம் சனந்தை கொலை செய்ய சொல்லி மிரட்டுகிறார்.

இதை தொடர்ந்து நடந்தது என்ன? சனந்தை, ரிஷிகாந்த் கொலை செய்தாரா, இல்லையா? கீர்த்தி சுரேசின் மர்ம மரணத்தின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

நடிகர்கள்

இறுக்கமான முகத்துடன் நண்பன் மீது பாசம் மற்றும் அவமானம் என காட்சிகளில் கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளார் ரிஷிகாந்த்.

அவருக்கு இணையாக சனந்த் ஆக்ரோசத்திலும் திருநங்கை கேரக்டரிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில காட்சிகளே வந்தாலும் கீர்த்தி சுரேஷ் கதைக்கு தாக்கத்தை கொடுத்துள்ளார்.

சவுந்தரராஜா அனுபவமிக்க கேரக்டரில் அசத்தி இருக்கிறார். முத்துக்குமார், ஜீவா சுப்பிரமணியன், கஜராஜன், ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோர் நடிப்பு கூடுதல் பலம்.

ஔிப்பதிவு

மதுரை மாவட்ட கிராம பகுதிகளை கதைகளத்திற்கேற்ப காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

இசை

இளையராஜாவின் இசையில் முத்துமணி, கல்யாண விருந்து பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com