பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் 'எல்.ஐ.கே.' என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீசாவதாக இருந்தது.
ஆனால் 'டியூட்' படத்தின் ரிலீசால் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இன்னும் சில காரணங்களால் இந்தப் படம் ரிலீசுக்கு வராமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் ஏப்ரல் 3-ந்தேதி இந்தப் படம் ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் ஆறுதல்பட்டிருந்த நேரத்தில், இப்போது அந்த தேதியில் ரிலீசாகவில்லை என்று தெரியவந்துள்ளது. தற்போது ஏப்ரல் 2-வது வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடக்கிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...