சினிமா செய்திகள்

தளபதினால தான் தெறி, மெர்சல், பிகில் எல்லாம்..!- அட்லீ

ராஜா ராணி தான் நான் எங்கே போனாலும் முதல் சொல்லக்கூடிய படம்.

டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படமாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள படம் "இதயம் முரளி". இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

ஜூலை 10-ல் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி. அவரது மகன் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 10-ந்தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டிரெய்லர்

இதயம் முரளி' திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் விறுவிறுப்பான டிரெய்லர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எல்லாம் தளபதினால தான்- அட்லீ

'இதயம் முரளி' திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் அட்லீ பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ராஜா ராணிக்கு பிறகு என்னால லவ் ஃபிலிம் பண்ண முடியல. ராஜா ராணி தான் நான் எங்கே போனாலும் முதல் சொல்லக்கூடிய படம். அதன் பிறகு தளபதினால தெறி, மெர்சல், பிகில் எல்லாம்.

லவ் ஃப்லிம் பண்ண முடியலேன்னு ஒரு ஏக்கம் இருந்துச்சு அதனால தான் நான் இந்த படத்தை PRODUCE பண்ணலாம்னு இருந்தேன்.

ஆகாஷோட பயோ பிக் தான் இந்த இதயம் முரளி படம். அதே படத்தில் உள்ள ஃபஹத் ஃபாசில் தான் நான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

கயாடு லோஹர் நீங்க வேற லெவல், ஒரு NATIONAL CRUSH-ஆ சீக்கிரம் ஆகிடுவாங்கனு தோணுது, பரிதாபங்கள் சுதாகர் உடைய மிகப்பெரிய FAN நான்.

இவ்வாறு அவர் கூறினார்.