சினிமா செய்திகள்

‘ஜெயிலர் 2’ படத்தின் நான்காவது பாடல் வெளியானது!

படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள இரண்டாவது படம் ‘ஜெயிலர் 2’. ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக ஜெயிலர் 2 உருவாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பட வெளியீடை முன்னிட்டு படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில், இன்று படத்தின் நான்காவது பாடலான பிந்தாஸ் வெளியாகி உள்ளது. நேற்று மூன்றாவது பாடலான ஒன் நேம் வெளியானநிலையில் இன்று நான்காவது பாடல் வெளியாகி உள்ளது.

முன்னதாக அலே போலேலோ, ஒன் சன் ஒன் மூன் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT