‘ஜெயிலர் 2’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!

படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!
Published on: 

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது.

ஜெயிலர்

கடந்த 2023ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதன் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ உருவாகி உள்ளது.

முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் சிவராஜ்குமார், வித்யா பாலன், சூரஜ் வெஞ்சரமுடு என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வெளியீடு தேதி நெருங்கி வரும்நிலையில், படக்குழு அடுத்தடுத்த டீசர், பாடல்கள் என அட்டேட்டே கொடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று மூன்றாவது பாடலான ‘ஒன் நேம்’ வெளியாகி உள்ளது.

முன்னதாக அலே போலேலோ, ஒன் சன் ஒன் மூன் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com