சினிமா செய்திகள்

தளபதி 69 படப்பிடிப்பு: வெளியான புது அப்டேட்

தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். தளபதி 69 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மாலை மலர்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கடைசி படம்- "தளபதி 69" என கூறப்படுகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டது.

அவ்வப்போது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு சார்ந்த தகவல்கள் மட்டும் வெளியாகி வந்தது. இந்த நிலையில், விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால், இதற்கு பெருமளவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ, நரேன் ஆகியோரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.