நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
சாகுந்தலம்
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், 'சாகுந்தலம்' திரைப்படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது.
சாகுந்தலம் போஸ்டர்
இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் 'சாகுந்தலம் திரைப்படத்தை பிப்ரவரி 17-ஆம் வெளியிட முடியாது என்பதை எங்கள் அன்பான பார்வையாளர்களுக்கு தெரிவிக்க நாங்கள் வருந்துகிறோம். வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம். உங்கள் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.