உதயநிதி 
சினிமா செய்திகள்

நெஞ்சுக்கு நீதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழில் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தை மே 20 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.